ஜப்பானில் முதல் உயிரிழப்பு ; கொரோனா வைரஸ்!

ஜப்பானில் முதல் உயிரிழப்பு ; கொரோனா வைரஸ்!

ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும்,  கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியிருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழந்த மூதாட்டியின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட அந்நாட்டு அரசு மறுத்து விட்டது.
உயிரிழந்த மூதாட்டி டோக்கியாவில் இருந்து தெற்கே உள்ள கனகவா மாகாணத்தில் வசித்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழந்த மூதாட்டி சீனா சென்று வந்த எந்த தகவலும் பதிவாகவில்லை என அந்நாட்டு சுகாதார துறை மந்திரி கட்சுனோபு கட்டோதெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!