ஜி 7 உச்சி மாநாடு ; டிரம்பின் அழைப்பை நிராகரித்த ஏஞ்சலா மெர்க்கல்!

ஜி 7 உச்சி மாநாடு ; டிரம்பின்  அழைப்பை நிராகரித்த ஏஞ்சலா மெர்க்கல்!

ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, அமெரிக்காவில் ஜி-7 உச்சி மாநாட்டை நடத்துவதை விட சிறந்த முன்னுதாரணம் இருக்க முடியாது என டிரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி, வாஷிங்டனில் ஜூன் மாத இறுதியில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்குமாறு ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அழைப்புக்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நன்றி தெரிவித்ததாக, அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். எனினும், தற்போதைய கொரோனா பேரிடர் நிலவரத்தை கருத்தில் கொண்டு, வாஷிங்டனுக்கு பயணம் செய்து, மாநாட்டில் நேரடியாக பங்கேற்க இயலாது என மெர்க்கல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments