ஜெனிவாவில் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்!

ஜெனிவாவில் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு சிறுபான்மை இன மக்களைக் கவனத்தில் எடுக்காமல் செயற்பட்டு வருகின்றது. அத்துடன், சர்வதேசத்துடன் முரண்படும் வகையில் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றது. எனவே, இம்முறை ஜெனிவாவில் அரசு எதிர் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

«இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை அடியோடு நிராகரிக்க வேண்டும் எனவும், அந்தத் தீர்மானத்தைக் குப்பையில் தூக்கி வீச வேண்டும் எனவும் கோத்தாபய தரப்பினர் கூறியுள்ளமை முட்டாள்தனமான கருத்தாகும்.

ஜெனிவாவில் இலங்கை மீதான தீர்மானம் இறுதியில் இலங்கையின் இணை அனுசரணையுடன் ஏனைய அனைத்து உறுப்புரிமை நாடுகளின் ஆதரவுடன்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அரச தரப்பினர் கவனத்தில்கொள்ள வேண்டும். அந்தத் தீர்மானத்துக்கு மதிப்பளித்து அரசாங்கம் இதனை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும்.

அதேவேளை, கோத்தாபய அரசு வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிட்டு சர்வதேச சமூகத்துடன் முட்டி மோதுவதால் ஜெனிவாவில் இம்முறை எதிர் விளைவுகளைச் சந்திக்க வேண்டியும் வரும்» என தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பல படுகொலைகளுக்கு காரணமாக இருந்த சிறீலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா கவலைதெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!