ஜெர்மனியில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு ; 9 பேர் பலி!

ஜெர்மனியில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு ; 9 பேர் பலி!

ஜெர்மனியில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய நபர் தனது தாயை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்தார்.

ஜெர்மனியின் ஹனாவ் ( Hanau ) நகரில்  சிஷா  மற்றும் அரெனா ஆகிய இரு மதுபானக் கூடங்களில், புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் நுழைந்து, அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் பலியாயினர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது, இதில் தொடர்புடைய முக்கிய நபரும், அவருடைய தாயாரும் அவர் இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் ஜெர்மன் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த