ஜெர்மனில், சிறிய நகரம் ஒன்றில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

ஜெர்மனில், சிறிய நகரம் ஒன்றில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

ஜேர்மனில் பேடன்-வூர்ட்டம்பேர்க்கில் (Baden-Würtetemberg) அமைந்துள்ள ரோட் ஆம் சீ (Rot am See) என்ற நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக ஜெர்மன் செய்தி இதழ் ஃபோகஸ்(Focus) தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் ஒரு கட்டிடத்திற்குள் நடந்துள்ளது என்று அவர்கள் மேலும் கூறியுள்ளார்கள்.
குற்றவாளிகளை கைது செய்ய கூடுதல் அவசர சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன என்று உள்ளூர் பாதுகாப்பு படையினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர் .

குற்றவாளியின் அடையாளம் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

ஃபோகஸின்(Focus) கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களும் குற்றவாளியும் ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கவேண்டும் என நம்பப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த