ஜேர்மனியில் பயங்கரம்: 12 வயது சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொன்ற சிறுவர்கள்!

You are currently viewing ஜேர்மனியில் பயங்கரம்: 12 வயது சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொன்ற சிறுவர்கள்!

ஜேர்மனியில் 12 வயது சிறுமியை 30 முறை கத்தியால் குத்திய இரண்டு டீன் ஏஜ் பெண்கள், அடுத்த நாளே டிக்டாக்கில் நடன வீடியோ பதிவிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக 12 வயது டீன் ஏஜ் சிறுமி லூயிஸ் என்பவர் பெரியவர் ஒருவரிடம் தெரியப்படுத்தியதற்கு ”பழிவாங்கும் விதமாக” 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சக மாணவர்கள் 30 முறைக்கு மேல் அவரை கத்தியால் குத்தி கொன்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கொலை குற்றத்திற்காக சந்தேகிக்கப்படும் இரண்டு டீன் ஏஜ் மாணவர்களும், கொடூரமான தாக்குதலுக்கு அடுத்த நாள் தாங்கள் நடனமாடும் வீடியோவை டிக்-டாக் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

லூயிஸ் சனிக்கிழமை மதியம் காணாமல் போவதற்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறி, வெள்ளிக்கிழமை இரவு 13 வயதுடைய சிறுமியின் வீட்டில் லூயிஸ் தூங்கியதாக கருதப்படுகிறது.

பின் பிராய்டன்பெர்க்கில் உள்ள 13 வயது சிறுமியின் வீட்டை விட்டு லூயிஸ் வெளியேறிய பிறகு, அவர் காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட 12 வயது மற்றும் 13 வயது சிறுமிகள் இருவரும் லுயிஸை கொன்று ஃப்ரூடன்பெர்க்கிற்கு அருகே உள்ள ஒரு காட்டுப் பகுதியில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது.

அத்துடன் அவர்களே காணாமல் போன லூயிஸைக் கண்டுபிடிக்க உதவுமாறு கெஞ்சும் வீடியோவும் வெளியிட்டுள்ளனர் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோப்லென்ஸ் காவல்துறையின் கொலைத் துறையின் தலைவர் ப்ளோரியன் லாக்கர் வழங்கிய தகவலில், கொலை குற்றத்தை 12 வயது மற்றும் 13 வயது ஜோடி ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments