ஜேர்மனிய அதிபர் “அங்கேலா மெர்கெல்” தனிமைப்படுத்தலில்! “கொரோனா” அதிர்வுகள்!!

ஜேர்மனிய அதிபர் “அங்கேலா மெர்கெல்” தனிமைப்படுத்தலில்! “கொரோனா” அதிர்வுகள்!!

ஜேர்மனிய அதிபர் “அங்கேலா மெர்கெல் / Angela Merkel” அம்மையார் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக “AFP” மட்டும் “Sky News” செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜேர்மனிய அதிபரின் பேச்சாளரை ஆதாரம் காட்டி, மேற்படி செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஜேர்மனிய அதிபருக்கு, நோயெதிர்ப்பு மருந்து வழங்கிய வைத்தியருக்கு தற்போது “கொரோனா” தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரியவந்திருப்பதால், அவரிடமிருந்து “கொரோனா” வைரஸ் ஜேர்மனிய அதிபருக்கும் தொற்றியிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரிலேயே, “அங்கேலா மேர்க்கெல்” அம்மையார் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த