ஜேர்மனிய அமைச்சர் தற்கொலை! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing ஜேர்மனிய அமைச்சர் தற்கொலை! “கொரோனா” அதிர்வுகள்!!

ஜெர்மனியின் “Hessen” மாநிலத்தின் நிதியமைச்சர், “Thomas Schäfer” தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“கொரோனா” பரவலின் பின்விளைவாக ஏற்படக்கூடிய பொருளாதார வீழ்ச்சியையிட்டு கவலையடைந்திருந்த மேற்படி அமைச்சர், தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகவும், அவரது உடல், தொடரூந்து பாதையருகில் கண்டெடுக்கப்பட்டதாகவும், “Hessen” மாநில அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிய அமைச்சர் தற்கொலை!

ஜேர்மனியின் “CDU” கட்ச்சியின் உறுப்பினராக இருந்த மேற்படி தற்கொலை செய்துகொண்ட அமைச்சர், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக, “Hessen” மாநில நிதியமைச்சராக பணியாற்றி வந்ததாகவும், “கொரோனா” பரவலின் பின்னர், மாநிலத்தில் ஏற்பட்டிருந்த பொருளாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்வதில் இரவு பகல் பாராமல் அயராது பணியாற்றியவர் எனவும் தெரிவித்திருக்கும் ஜேர்மனிய அதிபர் “Angela Merkel” அம்மையார், நடந்த விடயத்தையிட்டு தான் மிகவும் கவலையடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள