டக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்?

டக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்?

டக்ளஸ் தேவானந்த செய்த கொள்ளையினை அம்பலப்படுத்தியமையாலேயே டக்ளஸ் அவர் மீது சேறு பூசுவதாக அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த புலனாய்வு போராளி சேனன்.

கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டு விட்டு தப்பி வருகையில் அப்போது அங்கு காவல் கடமையில் இருந்த திலீபன் அண்ணையிடம் அகப்பட்டுக்கொண்டார். அப்போது டக்ளஸ் தேவானந்த இந்த விடயத்தை யாரிடமும் கூறவேண்டாமென்று திலீபன் அண்ணையிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், திலீபன் அண்ணை அவர் சொல்வதை கேட்பாரா ! அவர் இந்தச் சம்பவத்தை அப்போதே வெளிப்படுத்திவிட்டார்.அப்போது யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக திலீபன் அண்ணை இருந்தார்.

அந்தச் சம்பவத்தின் பின்னர் டக்ளஸ்க்கு திலீபன் அண்ணை அவர்கள் மீது செம கடுப்பும், வன்மமும். அதனால்தான் தற்போதும் திலீபன் அண்ணை அவர்களின் தியாகம் குறித்து கேள்வி எழுப்புகின்றார்.

தன் இனத்திற்கு எதிராக கூலிப்படையாகச் செயற்பட்டு, சொந்த இனத்தின் அழிவுக்காக முழுத் துரோகத் தனங்களிலும் ஈடுபட்டு, சொந்த இனத்தையே விற்றுப் பிழைப்புவாத அரசியல் நடத்தும் இவர்களுக்கு திலீபன் அண்ணை அவர்களின் தியாகங்கள் குறித்து உண்மையில் எவையும் தெரியாதுதான். அது தெரிந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும் எனவும் சேனன்  தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளது மூத்த புலனாய்வு போராளியான சேனன் என்றழைக்கப்படும் உதயன் மாஸ்டர் கைதாகி நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கொல்ல சதிதிட்டம் தீட்டியதாக கைதான அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேற்கு நாடொன்றில் வாழ்ந்து வருகின்றார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments