டிப்பர் மோதியதில் படுகாயமடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

டிப்பர் மோதியதில் படுகாயமடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் ஓட்டோவில் பயணித்த சிறுமி டிப்பருடன் மோதியதில் 6 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – உதய நகர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் நிதிலா என்ற சிறுமியே சிகிச்சைப் பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி, ஓட்டோவில் பெற்றோருடன் பயணித்த சமயம் வீதியைக் கடப்பதற்கு தயாராக நின்ற டிப்பரின் பின் பகுதியில் ஓட்டோ மோதியுள்ளது.

இதன்போது ஓட்டோவின் ‘கரியர்’ கம்பி வளைந்து அதன் உள்ளிருந்த சிறுமியின் தலையைத் தாக்கியுள்ளது.

உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ம்

எனினும் சிறுமி பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று முன்தினம் புதன்கிழமை உயிரிழந்தார்.

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments