டென்மார்கில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு!

You are currently viewing டென்மார்கில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு!
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் – டென்மார்கில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு
சிங்கள அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் மே 2009 இல் மௌனிக்கப்பட்ட பின்னரும், பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் தமிழ்மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது தொடர்பாகவும், பாடகர் சங்கீதன் போன்ற ஈழத்தமிழர்கள் தங்களது விடுதலை உணர்வுகளையும் அரசியல் கருத்துக்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பாகவும், டென்மார்க் புதிய பாராளுமன்ற உறுப்பினருடன், டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையில் அரசியல் சந்திப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் மனித எச்சங்கள், தொடர்ச்சியாக புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்களில், சிங்கள அரசு சான்றுகளையும் தடயங்களையும் மறைத்து அழிக்கும் முன்னர், தடயவியல் மற்றும் நீதியியல் துறைகளில் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச நாடுகள் மற்றும் சுயாதீன விசாரணை அமைப்புகள் உரிய முறையில் ஆய்வுகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில், தமிழ்மக்களின் மனித உரிமைகள், பேச்சுரிமை மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இனப்பிரச்சனைகான தீர்வாக, சுதந்திர தமிழீழம் ஒன்றே, சாத்தியமான தீர்வாக அமையும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply