டென்மார்க் பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு!

You are currently viewing டென்மார்க் பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு!

டென்மார்க் பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.

ஈழ மண்ணின் விடுதலைக்காய் வித்தாகி விதைந்துபோன மறவர்களை நினைவு கூரும் கார்த்திகை திங்களில், புலம்பெயர்ந்து டென்மார்க் தேசத்தின் விழுதுகளாய் விளங்கும் அடுத்த சந்தியினராய், டென்மார்க் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்களாகிய நாமும் மானவீரர்களை விளக்கேற்றி விழிமுடி கந்தகமலரோடு  நினைவு கூருகின்றோம்.

https://www.youtube.com/embed/QiIngsdRWPc

எதிர்வரும் 24.11.2021 அன்று ஓகுஸ் மற்றும் கொப்பன்காகன் (Aarhus , Copenhagen) நகரங்களிலும் மற்றும் 25.11.2021 அன்று ஓடன்ஸ்(Odense) நகரிலும் தாயக விடுதலைக்கு தங்கள் உயிரை வித்தாக்கிய மானவீரர்களை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற ஏற்பாடகி உள்ளது.

மாபெரும் சக்தியான மாணவர்களே, மறவர் துதிபாடி அவர் கனவுகளின் விழிகளுக்குள் சிறு விளக்கேற்றி ஒன்றாய் இணைந்து, அவர் கண்ட கனவுகள் கனவாகிப் போகாமல் இரு கரம் கோர்த்து பயணிக்க இருக்கிறோம்.

புலம் பெயர்ந்தபோதிலும் அகம் நிறைந்த மாவீரரை புலனறிவும் பகுத்தறிவும் செயலாற்றும் பல்கலைக் கூடங்களில் இணைந்து நாம் நினைவு கூருகின்றோம்.

அடம்பன் கொடி மட்டுமல்ல..

மாணவர் கைகளும் இணைந்தால் மிடுக்கே, வீர காவியம் படைத்த மாவீரரை மனம் உருகி நினைவு கூர்ந்திட அன்போடு அழைக்கின்றோம்.

நன்றி.

பல்கலைக்கழக மாணவர்கள்

டென்மார்க்

மண்டப மற்றும் நேர விபரங்கள்:

24.11.2021, 18.30 மணிக்கு

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments