டெல்லி ஆளுநர் மாளிகையில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

டெல்லி ஆளுநர் மாளிகையில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

டெல்லி ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. டெல்லியில் இதுவரையில் 22,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில், பொதுமக்களைத் தவிர மருத்துவர்கள், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவில், ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், அலுவலக உதவியாளர்கள் என 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது . இதனையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் டெல்லி மாநில அரசு அதிகாரிகள் 6 பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments