ஈரானால் தயாரிக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை தாக்குதலுக்காக பயன்படுத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் டெல் அவிவ் (Tel Aviv) மீது நடத்திய தாக்குதல்களுக்காக தாமாகவே தயாரித்த ‘கொரம்ஷார்-4’ (Khorramshahr-4) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகவும் (Ballistic Missile) ஒரே நேரத்தில் பல இடங்களைத் தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணையாகவும் பயன்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
குறித்த ஏவுகணை 13 மீற்றர் நீளம் கொண்டது. இது தோராயமாக ஒரு பேருந்தின் நீளத்தைக் கொண்டதுடன் அதிகபட்சமாக 2,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணை, 1.5 தொன் எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
2017ஆம் ஆண்டு முதல் ஈரானின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த போதிலும், இது 2023ஆம் ஆண்டிலேயே அவர்களால் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






