தங்கையை விருந்திற்கு அழைத்து வெட்டி கொன்ற கொடியவன்!

You are currently viewing தங்கையை விருந்திற்கு அழைத்து வெட்டி கொன்ற கொடியவன்!

ஜாதி மாற்றி திருமணம் செய்து கொண்ட தங்கையை அண்ணன் விருந்துக்கு அழைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது சகோதரி சரண்யா செவிலியராக வேலைப்பார்த்து வந்தார். இவருக்கும் உறவினரான ரஞ்சித்குமார் என்பவருக்கும் திருமணம் செய்வதற்கு வீட்டில் முடிவு செய்துள்ளனர்.

சரண்யா ஏற்கனவே மோகன் என்ற இளைஞரை காதலித்து வந்தது தெரிந்தும், ரஞ்சித்குமாரை கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்றதால் வீட்டைவிட்டு வெளியேறி, காதலன் மோகனைத் திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் வேறு வேறு சாதி என்பதால் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த நிலையில் சரண்யாவின் அண்ணன் சாதி மறுப்பு திருமணத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல அமைதி காத்து வந்தார்.

திருமணம் முடிந்த 5 நாட்கள் ஆன நிலையில் தனது தோழியின் அடகு வைத்த நகையை மீட்டுக் கொடுப்பதற்காக காதல் கணவர் மோகனுடன், சரண்யா சொந்த ஊருக்கு சென்றார்.

அப்போது தங்கை சரண்யாவை சந்தித்த அண்ணன் சக்திவேல், வீட்டில் மாப்பிள்ளை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன் வந்து சாப்பிட்டு விட்டு செல்லும்படி அழைத்துள்ளார்.

சாதி கடந்த காதலை வீட்டில் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்ற மகிழ்ச்சியில் தனது கணவருடன் அமர்ந்து தாய் வீட்டில் விருந்து சாப்பிட்டார்.

சரண்யா, விருந்து முடிந்து வீட்டிற்கு வெளியே வந்து கணவரின் ஊருக்கு புறப்பட்ட சரண்யாவையும், மோகனையும், சக்திவேலும், உறவினர் ரஞ்சித்குமாரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடதத்ததிலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரை கைது செய்துள்ளனர்.

சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த தங்கையை அண்ணனே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments