தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் வழியில் இயக்குனர் கவுதமன் கைது!

தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் வழியில் இயக்குனர் கவுதமன் கைது!

பெரியகோவில் குடமுழுக்கு விழாவுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் நேற்று கைது செய்யப்பட்டார்.

‘தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றபோது என்னை உளுந்தூர்பேட்டையில் வைத்து கைது செய்தனர். குறிப்பாக கைது செய்த இடத்திலேயே அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் என்னிடம் விசாரணையை தொடங்கினார்’ என்று இது குறித்து இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.

என்னை உளுந்தூர்பேட்டையில் கைது செய்த பிறகு தீவிரவாதிகளை போல் செல்போன்களை எடுத்துக்கொண்டு அடைத்து வைத்தனர். அதன் பிறகு நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தமிழ் உணர்வாளர்கள், தமிழர்கள், குறிப்பாக சத்தியபாமா என்ற பெண் ஓதுவார்கள் என்னை மீட்டெடுக்க வந்தனர்.  

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா முடியும் நிலையில் என்னை விடுவித்தனர் என்று இயக்குனர் கவுதமன் மேலும் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த