தடைகளைத் தகர்த்து முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு நினைவு வணக்கம்!

You are currently viewing தடைகளைத் தகர்த்து முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு நினைவு வணக்கம்!
தடைகளைத் தகர்த்து முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு நினைவு வணக்கம்! 1
தடைகளைத் தகர்த்து முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு நினைவு வணக்கம்! 2

இராணுவத்தினருடைய கெடுபிடிக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு, வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி நினைவு வணக்கம் செலுத்தியுள்ளார்.

இதன்போது, “எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்த கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி நினைவு வணக்கம் செலுத்தினோம்” என துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நினைவு வணக்க நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments