தணியாத தாகத்துடன் தரணியை வெல்வோம்!!

தணியாத தாகத்துடன்  தரணியை வெல்வோம்!!

மார்கழி பதின்னாங்கு மார்பு அடைப்பதுபோல் ஊரெல்லாம் ஒரு செய்தி உலாவியது! பொய்யாகிப் போகாதோவென மெய்யுருகி நின்றது!

உயிரான தலைவனின் மெய்யாய் கலந்த தேசத்தின் குரல் நோயின் பிடியில் சிக்குண்டு அமைதியாய் அடங்கிவிடுவாரென்று யார் நினைத்தார்!

உலகின் அரசியல் அரங்கில் தமிழரின் பிரதிநிதியாய் ஒலித்துக் கொண்டிருந்த குரல் ஓய்ந்துவிடுமென்று ஒருபோதும் நினைக்கவில்லை!

சர்வதேச சதிவலைப்பின்னலை தன் மதிநுட்ப அரசியலால் சின்னாபின்னமாக்கிய சிந்தனையாளன்

பேச்சுவார்த்தையின் இடைநடுவில் இல்லாமல்போவாரென்று இம்மியளவும் இதயம் உணரவில்லை!

அரசியல் பல்கலைக்கழகத்தின் அத்திவாரத்தை புற்றுநோய் அரித்து வீழ்த்துமென்று விடுதலை விரும்பிகள் கடுகளவும் எதிர்பார்க்கவில்லை!

அரசியல் அரங்கில் ஏறினாலே எதிரிக்கு குலைப்பன் காச்சல் நடுக்கம் வருமளவிற்கு எடுக்கும் வியூக அரசியல் சுடக்குப்போட்டு முடக்கிவிடும் பேச்சுத்திறனில் ஈசலாய் இறந்து போகும் எதிரிகளின் வாதம்!

தலைவனின் அருகில் இன்பத்திலும் துன்பத்திலும் தோள்கொடுக்கும் தோழனாய் அரசியல் அலோசகராய் விடுதலைப்போரின் உச்சம் வரை

முடியாத உடல்நிலையிலும் விடியலுக்காய் வினையமாய் வாழ்ந்தவர்!

அவர் அடி தொழுது அழியாத அவர் கனவின் பாதையில் தணியாத தாகத்தோடு தரணியை வெல்வோம்!!

✍ தூயவன்

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த