தனக்கு தானே தீ வைத்து இளம் யுவதி பலி!!

தனக்கு தானே தீ வைத்து இளம் யுவதி பலி!!

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கொட்டைக்காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சூரியகுமார் தேனுஜா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.

மல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.எனினும் பெற்றோர்கள் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இப்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்த்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்றுமுன்தினம் (24) வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.தீக்காயத்திற்கு உள்ளன யுவதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.எனினும் சிகிச்சை பலனின்றி அன்றையதினமே மாலை உயிரிழந்துள்ளார்.இந்த இறப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
3 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments
மணிமலர்
மணிமலர்
3 மாதங்களுக்கு முன்பு

ஏன் பெண்கள் இப்படி ஒரு சிந்தனைகள் கொண்டு இருக்கிறார்கள்.சமுதாயத்தில் சீர்செய்ய நிறைய பிரச்சனைகள் இருப்பின்..அதை உணராமல் இப்படி ஒரு செயல்.இளைய சமுதாயத்தின் முன்னோடிகளாக இருக்க வேண்டிய இளையோர்களே…சிந்தனை மாற்றம் மிக முக்கியம்.தெளிவான சிந்தனை மாற்றமே…நல்ல செயல்பாடுகளின்

வெற்றியாகும்.

news@tmr
Admin
3 மாதங்களுக்கு முன்பு

உங்கள் கருத்துக்கு நன்றி.., தொடர்ந்து எமது செய்திச்சேவையுடன் இணைந்திருங்கள்!

மணிமலர்
மணிமலர்
3 மாதங்களுக்கு முன்பு

நன்றி….தமிழ் முரசம்🙏