தனிமைப்படுத்தப்பட்ட 157 போர் விடுவிப்பு!

சீசேல் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 157 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர். 

கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அந்தவகையில்,  சீசேல் நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட பயணிகள் பம்மைபடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.  

அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தநிலையில், 157 பேர் அவர்களது சொந்த இடங்களான காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, கொழும்பு, குருநாகல்,  நீர்கொழும்பு, கேகாலை,  அநுராதபுரம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

குறித்த பயணிகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு, அதில் கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் உள்ள எட்டு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் 4,072 பேருக்கும் மேற்பட்டோர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments