தனிமைப்படுத்தலுக்கு ஆட்களை ஏற்றிவந்த பேரூந்து பளையில் விபத்து!

You are currently viewing தனிமைப்படுத்தலுக்கு ஆட்களை ஏற்றிவந்த பேரூந்து பளையில் விபத்து!

கிளிநொச்சி – பளைப் பகுதியில் இன்று காலை தனிமைப்படுத்தலுக்கு ஆட்களை ஏற்றிவந்த பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையாட்டத்தில் தனிமைப்படுத்தப்படுவதற்காக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 254 பேர் இன்று(27) காலை 11 பேருந்துகளில் அழைத்து வரப்பட்டிரந்தனர்.

குறித்த பேரூந்துகள் இன்று காலை 7 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பேருந்து பளைப் பகுதியில் தண்ணீர் விநியோகத்திற்காக பொருத்தப்பட்டிருந்த குழாயுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவத்தில் 17 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள