தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி நடமாடிய 452 பேர் கைது!

You are currently viewing தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி நடமாடிய 452 பேர் கைது!

கொரோனாத் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (ஓகஸ்ட்-22) அதிகாலை 6.00 மணியுடன் நிறைவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 452 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்கு வந்த கடந்த ஒக்டோபரிலிருந்து இதுவரையில் 56,294 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்துக்கு பிரவேசிக்கும், அங்கிருந்து வெளியேறும் 13 இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் 639 வாகனங்களும், 1128 நபர்களும் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments