தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கை தமிழர் பரமேஸ்வரி மரணம்!

You are currently viewing தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கை தமிழர் பரமேஸ்வரி மரணம்!

இலங்கையிலிருந்து அகதியாக வந்த மூதாட்டி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் மணல் திட்டில் கடந்த ஜூன் 27ஆம் தேதி இரண்டு இலங்கை தமிழர்கள் 2 பேர் மயக்க நிலையில் மீட்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோவில் கடல் பகுதியில் கடற்கரை மணல் திட்டில் மயக்க நிலையில் கிடந்த இலங்கை கொள்ளர்ஸ்ரீகுளத்தை சேர்ந்த பெரியண்ணன் என்ற 82 வயது முதியவரும், பரமேஸ்வரி என்ற 70 வயது மூதாட்டியையும் மரையன் காவற்துறையினர் மீட்டனர்.

வயதான பெண்ணின் நெற்றியில் காயம் இருந்ததால் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் முதியவர் கண் திறந்த நிலையில் மூதாட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் மருத்துவமனையில் மயக்கு நிலையிலேயே இருந்தார். இதனால் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து கடந்த 27ஆம் தேதி அகதிகளாக வந்த வயதான தம்பதியினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை பரமேஸ்வரி மரணமடைந்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments