தமிழகத்தில் கொரோனா ; இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு!

You are currently viewing தமிழகத்தில் கொரோனா ; இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 30 பேர் வெளியேறியுள்ளனர். அதன்மூலம் இதுவரை, 1409 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்துவீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 12,863 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 30 பேர் வெளியேறியுள்ளனர். அதன்மூலம், 1409 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்தநிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் ஏராளமான பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள