தமிழகத்தில் கொரோனா ; ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் கொரோனா ; ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசு வெளியிட்ட மாநில வாரியாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பகுதிகள்:-

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த  பிறப்பிக்கப்பட்ட 2 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 3 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்த சூழலில் மாநில வாரியாக சிவப்பு, ஆரஞ்சு , பச்சை மண்டல பகுதிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இல்லாத மொத்தம் 319 பச்சை மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் ஒரு மாவட்டமாக கிருஷ்ணகிரி மட்டுமே இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும் 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மாவட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டியத்தில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டல பகுதிகளில் இடம் பெற்றுள்ளன. 16 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 6 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் உள்ளன. நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 19 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 36 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்கள் பட்டியலிலும், 20 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் உள்ளன.

கேரளாவில் 2 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 10 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 2 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 1 மாவட்டம் ஆரஞ்சு மண்டலங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 3 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் சிவப்பு மண்டலங்கள் பட்டியலில் எந்த ஒரு மாவட்டமும் இடம் பெறவில்லை.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments