தமிழகத்தில் கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 34 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று 12,100 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 400 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் தமிழகத்திலிருந்த 689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 94 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 34 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments