தமிழகத்தில் கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா ;  பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இன்று தமிழகம் முழுவதும் 9,677 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 611 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 9342 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று தமிழகத்திலுள்ள 592 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 127 ஆக அதிகரித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments