தமிழகத்தில் 13 வயது சிறுமியை 400 பேர் சீரழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது!

தமிழகத்தில் 13 வயது சிறுமியை 400 பேர் சீரழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது!

மேலும் மதன் குமாரின் நண்பர்கள் மற்றும் மதன் குமாரின் சகோதரியான சந்தியாவின் நண்பர்கள் என மாறிமாறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் அம்பலமானது.
இந்த வழக்கில் கடந்த 12-ஆம் திகதி சிறுமியின் அக்காவான ஷாகிதாபானு, மதன்குமார், மதன் குமாரின் தங்கை சந்தியா, செல்வி, மகேஸ்வரி, வனிதா, விஜயா, கார்த்தி ஆகிய 8 பேரை கைது செய்த பொலிசார் போக்சோ சட்டத்தில் அவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பொலிசார் ஒருவர் மதுபோதையில் தன்னை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாக கூறியதையடுத்து பொலிசார் மீண்டும் விசாரணையில் இறங்கினர்.

இதையடுத்து தற்போது மேலும் அதிர்ச்சி தரும் தகவலாக, குறித்த சிறுமியை சிறுமியை 400 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது
இதில், பாஜக பிரமுகர், காவல் ஆய்வாளர்,மேலு அரசு அதிகாரிகள் உள்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் இவர்களில் 15 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

பகிர்ந்துகொள்ள