தமிழகம் சென்று வந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த இருவர் கைது!

தமிழகம் சென்று வந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த இருவர் கைது!

கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்கு சென்று கஞ்சா கடத்தி வந்த இருவர் கடற்பகுதியில் வைத்து படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடபகுதி கடற்பரப்பில் கடல் சுற்றுகாவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையனரால் இன்று (05) அதிகாலை சந்தேகத்திற்கு இடமாமன படகின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த படகை அண்மித்து சோதனைகளை மேற்கொண்ட போது தமிழ்நாட்டில் இருந்து கேரள கஞ்சா தொகுதி கடத்திவரப்பட்டமை தெரிய வந்தது.

இதன்போது வடமராட்சி கிழக்கு, அழியவளை பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments