தமிழகம் : திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று!

தமிழகம் : திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 9-வது இடத்தில் திருச்சி உள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இன்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நான்கு பேரில், 2 பேர் திருச்சி மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள், மேலும் 2 பேர் துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள்.

இவர்களில் ஒரு வயது குழந்தையும் அடங்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் தந்தையின் மூலம் இக்குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கைக்குழந்தை என்பதால், அதன் தாயாரும் உடனிருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 9-வது இடத்தில் திருச்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 43 நபர்களையும் தொடர்ந்து மருத்துவக்குழுவினர் கண்காணித்து தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments