தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கவுள்ள உச்ச நீதிமன்றம்!

தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கவுள்ள  உச்ச நீதிமன்றம்!

மது விற்பனையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமுல் படுத்தாததால், ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைளை திறப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டது. தேவைப்பட்டால் இணையவழி மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் முறையை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனால் 2 நாள் விற்பனைக்கு பிறகு மதுக்கடைகளை தமிழக அரசு இழுத்து மூடியது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்புக்கு எதிராக கடந்த 9 ஆம் தேதி தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) தரப்பில் உச்ச நீதிமன்ற த்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பபட்டது. இந்த நிலையில், இந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக்கூடாது என்று தற்காலிக நிறுத்த மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது நினைவு கூறத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments