தமிழக சட்ட மன்ற தேர்தலில் த.வே.க முன்னிலையில்!

You are currently viewing தமிழக சட்ட மன்ற தேர்தலில் த.வே.க முன்னிலையில்!
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், விஜய் இல்லத்திற்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீசாருடன் துணை ராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


வாக்கு எண்ணிக்கை நிலவரம்: மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மதிய  நிலவரப்படி100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி

த.வெ.க. – 108

அ.தி.மு.க. – 73

தி.மு.க. – 53

நா.த.க. – 0

தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, சென்னையில் 16 இடங்களில் த.வெ.க. முன்னிலை வகித்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.


தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply