தமிழக பெண்ணுக்கு ஜேர்மனியின் உயரிய விருது!

You are currently viewing தமிழக பெண்ணுக்கு ஜேர்மனியின் உயரிய விருது!

சமூக ஆர்வலர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்திறன் கொண்ட இந்தியப்பெண் ஒருவருக்கு ஜேர்மனியின் உயரிய விருதொன்று வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டில், சென்னையில் பிறந்தவர் மீனா கந்தசாமி. சமூக ஆர்வலர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்திறன் கொண்ட மீனாவுக்கு ஜேர்மனியின் இலக்கியத்திற்கான உயரிய விருதான Hermann Kesten என்னும் விருது வழங்கப்பட உள்ளது.

துன்புறுத்தப்படும் எழுத்தாளர்களுக்கு ஆதரவளிக்க தன்னிகரில்லாத வகையில் உழைப்போருக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான Hermann Kesten விருதுக்காக மீனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மீனா, 1984ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். முன்பு ‘The Dalit’ என்னும் பத்திரிகையில் பணியாற்றிய அவர், பின்னர் முழு நேர எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரானார்.

மீனாவுக்கு சமீபத்தில் Fellow of the Royal Society of Literature என்னும் கௌரவமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments