தமிழக மீனவர்களின் படகுகள் – சிறீலங்கா கடற்படையின் உதவிய நாடிய இந்தியா!

தமிழக மீனவர்களின் படகுகள் – சிறீலங்கா கடற்படையின் உதவிய நாடிய இந்தியா!

இந்தியா- தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடற்றொழிலுக்காக சென்ற படகும் 4 மீனவர்களும் காணாமல்போன நிலையில் அவர்கள் இலங்கைக்குள் வந்தனரா? என்பதை அறிய இலங்கை கடற்படையினரின் உதவி நாடப்பட்டிருக்கின்றது. 

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 718 இலக்கமுடைய ரோலர் படகில் 4 மீனவர்கள் புறப்பட்ட நிலையில் அவர்கள் திரும்ப கரை திரும்பாததுடன், படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்கள் தொடர்பில் எந்த தவலும் இல்லாத நிலையிலேயே மேற்படி படகு இலங்கை கரையை அடைந்ததா என இலங்கை கடற்படையினரிடம் கோரப்பட்டுள்ளது.

இதேநேரம் இவ்வாறு காணமல்போன படகினைத் தேடி இந்திய விமானப்படைக்குச் சொந்தமான உரங்குவானூர்தி ஒன்று கச்சதீவை அண்டிய பகுதிவரை தேடுதல் மேற்கொண்டு பறப்பில் ஈடுபட்டது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments