தமிழரின் அறிவியல் முதிர்ச்சி வான்புலிகள்!

தமிழரின் அறிவியல் முதிர்ச்சி வான்புலிகள்!

தமிழரின் அறிவியல் முதிர்ச்சி வான்புலிகள்!

அறிவியல் புரட்சியில் ஞானமுள்ள தமிழரென
வானெழுந்து வரலாறு
படைத்தனர் வான்புலிகள்!

எதிரியின் பரிபாரங்களை
குறிதவறாது
அவர்களின் வேலியுக்குள்
வீராப்பாய் வெடித்தனர்
வான்புலிகள்!

எமக்கொரு இழிநிலை
வேண்டாம்
அடக்குமுறைக் கரங்களை முறித்துப்போட்டு
உறவுகளை மீட்க
எரிதணலாய் எழுவோமென
உடலை
வெடிகுண்டாய்
மாற்றியவர்
வான்புலிகள்!

தேசியத்தலைவரின்
முப்படைக்கட்டுமானங்களின்
முதுகெலும்பாய் திகழ்ந்தவர்கள்
வான்புலிகள்!

வலிகளைக் கண்டு
வீழ்ந்து விடாது
குமுறும் மலைகளாய்
உயர்ந்தவர்கள்
வான்புலிகள்!

அகவைபேதமின்றி
அழித்தொழிக்கும்
தமிழீழமண்ணில்
போராடுவதற்கு
வயதெல்லை தேவையா?
என்ற கேள்வியோடு
சிறியவயதில்
சிறுத்தைப்படையில்
சீறியவன் வான்புலி
றூபன்!

தலைவரின் ஆற்றலின் ஆளுமைகளாக உலகத்தலைவர்களின் கண்களில் விசித்திரமானவர்களாக மண்ணின் கவசங்களாக விண்ணில் தாரகைகளாக ஒளிர்ந்த காவியங்கள் வான்புலிகள்!

காலம் காலமாக வாழ்ந்த மண்ணில்
விடுதலையோடு வாழவே ஆசைப்பட்டோம்
ஆனால்
ஓலங்களும் ஒப்பாரிகளும்
நாள்தோறும்
நடக்ககையில்
முடங்களாக வாழமுடியாது
சினம்கொண்டுதான்
ஆகவேண்டும்!

யூத இனம்போல்
நவீன கிட்லர்கள்
தமிழர்களை அழிப்பதை
தடுத்து நிறுத்த
தமிழர்களாக தலைநிமிராது போனால்
வராலாறு இழிநிலையை
பிரசவிக்கும் அது
வாழையடி வாழையாக
வலிகளையே
சுமக்கும்!!!

✍தூயவன்

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments