தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுத்து நிறுத்துங்கள்!!

தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுத்து நிறுத்துங்கள்!!

ராஜபக்ச அரசாங்கத்தால் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுத்து நிறுத்துமாறு பிரித்தானிய அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா அம்மையார் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுத் தூபி இடித்துத் தகர்க்கப்பட்டமையைப் பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து நேற்று 11.01.2021 திங்கட்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றிய தொழிற்கட்சியின் மிற்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா அம்மையார், தமது நாட்டு மக்களான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ச சகோதரர்கள், தொடர்ந்தும் தமிழர்களுக்கு அநீதி இழைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் புரிந்தவர்கள், போர்க்குற்றவாளிகள் என முற்றிலும் குற்றவாளிகளைக் கொண்ட அரசாங்கமாகவே ராஜபக்ச அரசாங்கம் திகழ்வதாகத் தனது உரையில் மேலும் சுட்டிக் காட்டிய சிபோன் மக்டொனா அம்மையார், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள