தமிழர்களுக்கு துரோகம் செய்யும் தமிழ் அரசு கட்சி!!

You are currently viewing தமிழர்களுக்கு துரோகம் செய்யும் தமிழ் அரசு கட்சி!!

https://www.youtube.com/watch?v=tnpKfdxb1a0&t=24s

தமிழீழ விடுதலைப் புலிகளும் மனித உரிமைகள், போர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்று தமிழ் அரசு கட்சி மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு அணியினராக கடிதம் அனுப்பும் முடிவுக்கு வந்துள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத் தொடரை ஒட்டி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு தமிழர் தரப்பின் சார்பில் கடிதம் அனுப்புவதற்கு கூட்டாக கட்சிகள் முடிவு எடுத்தன. இந்த நிலையில், 5 தமிழ்த் தேசியக் கட்சிகள் சேர்ந்து நேற்று கடிதம் அனுப்பிய நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் தனியாக கடிதம் ஒன்றை அனுப்ப முடிவு செய்தது. இதில், அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கையொப்பமிடுவது என்று முடிவானநிலையில், அந்தக் கடிதத்தில் “இராணுவமும், விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமைகளை மீறியுள்ளனர். இவற்றில் சில போர் குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படும்” என்று பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையின் விடயமும் அந்தக் கடிதத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.

​இதற்கு தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், அந்த விடயத்தை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன் இந்தக் கடிதத்தை தயாரித்த சுமந்திரன் எம். பிக்கு தெரியப்படுத்த முயற்சி செய்யப்பட்டது. இது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், எங்களுடைய கருத்தை கணக்கில் எடுக்காதுவிட்டால், மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாம் தனித்து கடிதம் ஒன்றை அனுப்புவோம். தற்போது தயாரிக்கப்பட்ட கடிதத்தில் கையொப்பம் இடமாட்டார் என்று தெரிவித்தார். தமிழ் அரசுக் கட்சியின் கடிதம் பெரும்பாலும் இன்று அல்லது நாளை மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிய வருகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments