தமிழர்களைபடுகொலை செய்பவர்களை விடுதலைசெய்வோம் -ஜனாதிபதி-

தமிழர்களைபடுகொலை செய்பவர்களை விடுதலைசெய்வோம் -ஜனாதிபதி-

மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை பொது மன்னிப்பில் விடுதலை செய்ததன் ஊடாக, தமிழர்களை படுகொலை செய்பவர்களை நாம் விடுதலை செய்வோம் என்ற செய்தியை இலங்கை இராணுவத்துக்கு ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“தான் ஜனாதிபதியாக வந்தால் சிறையில் உள்ள இராணுவத்தினரை விடுவிப்போம் என தேர்தல் காலத்தில் கூறியிருந்தார். அதேபோல் அண்மையில் 34 இராணுவ அதிகாரிகளை சிறையில் இருந்து பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார். அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்க என்ற இராணுவ அதிகாரியை மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த செயற்பாடு எமக்கு அதிர்ச்சியை தரவில்லை. ஏனெனில் சிங்களத் தலைவர்களின் மனநிலையில் எப்பபோதும் மாற்றம் ஏற்படாது. இதனை நாம் ஆரமப்த்தில் இருந்தே கூறி வருகின்றோம்.

இந்தச் செயற்பாடானது, தமிழர்களைப் படுகொலை செய்பவர்களை நாம் விடுதலை செய்வோம் என்ற செய்தியை இராணுவத்துக்கு வழங்கியுள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” எனவும், அவர் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!