தமிழர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது – கஜேந்திரகுமார்!

தமிழர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது – கஜேந்திரகுமார்!

தமிழ் மக்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் 30 சதவீதமான பிரதேசங்கள் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தன. இவற்றில் பொருளாதாரத்தில் பெரும்பங்காற்றுகின்ற விவசாயம், மீன்பிடி போன்றவற்றை செய்ய முடியாது உற்ளன.

32 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக இருந்தும், எமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கோ, எமது மக்களின் வாள்வாதாரத்தை உயர்த்துவதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தமிழர் தாயகத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தமிழ் மக்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான திட்டங்களே மேற்கொள்ளப்படுகின்றன, என்றார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments