தமிழின அழிப்பு ஒருபோதும் இடம்பெறவேயில்லையாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் சிங்கள அரசு!

You are currently viewing தமிழின அழிப்பு ஒருபோதும் இடம்பெறவேயில்லையாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் சிங்கள அரசு!

“இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது. அவ்வாறு எதுவுமே இங்கு நடக்கவில்லை.” என்று  “முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில்பேரினவாத சிங்கள அச்ரைன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்தவுள்ளார். அது சிறந்த ஆரம்பமாக அமையும் என நம்புவதாக தெரிவித்துள்ளார் . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு   இனப்படுகொலையாளி கோட்டாபயவுடன்   பேச்சு வார்த்தை   நடத்துவதின் நோக்கம்  கூட்டமைப்பு யாருக்கு  சார்பானவர்கள்  என்பதை மீண்டும் மீண்டும் வெளிகாட்டி நிற்கிறது​

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான ஆயுதங்கள் மே மாதம் 2009 இல் மௌனிக்கப்பட்டது. இந்நிலையில் ஜ.நா. பிரதிநிகள், மற்றும் அமெரிக்கா, இந்தியா, நோர்வே, ஜ.யு போன்ற பல சர்வதேச நாடுகள் கொடுத்த வாக்குகளிற்கமைய பல்லாயிரக்கணக்கான போராளிகளும் பொதுமக்களும் சிங்கள இனவாத அரசின் படுகொலை இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களில் 146679 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

பேரினவாத சிங்கள  அரசு நடத்திய தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு சர்வதேச  ரீதியில் தமிழர்கள் தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றியின் அடிப்படையில் பேரினவாத சிங்கள  அரசின் ஆட்சியாளர்கள் மற்றும் சிங்கள படையினர்  சார்ந்த ஏனையோர் நடத்திய தமிழின அழிப்பு தொடர்பில்   விசாரணை  முன்னெடுக்க தொடங்கும்   புறச்சூழ்நிலை  உருவாகியுள்ள  இக்காலத்தில்  அதிலிருந்து மடைமாற்றம் செய்து    தண்டனையிலிருந்து  தப்பித்துகொள்ள இலங்கையில்   தமிழின அழிப்பு ஒன்றும் நடைபெறவில்லை என்று    “முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து வெள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது  இரத்தக்கறை படிந்த சிங்கள அரசிற்கு  வெள்ளையடிக்க   தமிழினத்தில் பிறந்த சில கருணாக்களும் ,காக்கை வன்னிய வாரிசுகளும் புலம்பெயர்  தேசங்களில்   சிங்கள பேரினவாத    அரசினால் களமிறக்கப்பட்டுள்ளனர்  .

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments