தமிழின விரதபோக்கே சிங்கள பேரினவாத அரசு அழிவுக்கு காரணம்!

You are currently viewing தமிழின விரதபோக்கே சிங்கள பேரினவாத அரசு அழிவுக்கு காரணம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலும் எங்களுக்கான தீர்வு என்ன என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இனப்படுகொலையாளி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாங்கள் பட்ட வேதனையினை விட அதிக வேதனைபட்டுக் கொண்டிருக்கின்றார். தன் பிரச்சினைகளை சொல்லக்கூட இடமில்லாத அளவிற்கு போயுள்ளார்.

பிரச்சினைகள் எல்லாம் அவர் பக்கம் திரும்பியுள்ளது என்றால் அவர் தமிழ் இனத்திற்கு செய்த அட்டூழியங்கள் தான் காரணம். முன்னால் ஜனாதிபதியை மட்டும் நாங்கள் சொல்லவில்லை.

இதேவேளை எந்த அரசாங்கம் வந்தாலும் எங்களுக்கான தீர்வு கிடைக்காது. கலைக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவரை சர்வதேச கூண்டில் ஏற்றி எங்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.

எங்களுக்கான நீதி தேவை. எமக்கான நீதி கிடைக்கும் வரையில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுவோம்.

கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புதிதாக வந்த ஜனாதிபதி வீடு வீடாக சென்று தேடிப்பிடிக்கின்ற நிலை காணப்படுகின்றது.

தாங்கள் செய்யும் குற்றங்கள் இந்த போராட்டக்காரர்களால் நிரூபிக்கப்படும் என்பதாலும் சர்வதேசத்தில் அவர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பதாலும் ஓடி ஓடி கைது செய்து போராட்டத்தினை முறியடித்து வருகின்றார்கள். எனினும் தமிழர் பிரதேசத்தில் இது ஒருபோதும் நடைபெறாது என குறிப்பிட்டுள்ளார். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments