தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்!

தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்!

இலட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்

கடற்கரும்புலி லெப்.கேணல் கதிர்காமரூபன் (பெத்தா)

 லெப்.கேணல் ராகவன்,லெப்.கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன், லெப். கேணல் அன்புமணி, மேஜர் மிகுதன், மேஜர் செல்வம், மேஜர் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் வீரவணக்க நாள் இன்றாகும்

தமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
03-11-2007.

எனது அன்பான மக்களே!

சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.

தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.

தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.

நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

வே. பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

கடற்கரும்புலி லெப்.கேணல் கதிர்காமரூபன் (பெத்தா) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

சிறீலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட  மாவீரர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி லெப்.கேணல் கதிர்காமரூபன் (பெத்தா)
கனகானந்தம் ஆனந்தகிருஸ்ணன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2000

கடற்கரும்புலி லெப்.கேணல் சல்மான் (இரும்பொறை)
சிவஞானம் சிவஐங்கரன்
நல்லூர், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 02.11.2000

கடற்கரும்புலி மேஜர் இலக்கியன்
சிவகாமி கரிதரன்
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.11.2000

கடற்கரும்புலி கப்டன் குமாரவேல்
சுப்பிரமணியம் சுதர்சன்
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2000

கடற்கரும்புலி கப்டன் வல்லவன்
நவநீதன் பத்மலதன்
தட்சன்தோப்பு, கைதடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2000

கடற்கரும்புலி மேஜர் சதாசிவம் (சதா)
பிள்ளையான் திருச்செல்வன்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.11.2000

லெப்.கேணல் சதீஸ்குமார்
பஞ்சலிங்கம் ஜீவகரன்
5ம் வட்டாரம், சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 02.11.2000

லெப்.கேணல் ராகவன்,லெப்.கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

   

2.11.1999 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஒட்டுசுட்டான் படைத்தள வீழ்ச்சிக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்கள்.

சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன்(சின்னையா சுவேந்திரராசா)
சிறப்புத் தளபதி லெப்.கேணல் நியூட்டன்(தம்புராசா தயானந்தன்)
மேஜர் சாரங்கன்(ஆறுமுகம் கதீபன்)
கப்டன் ஜீவராசா(விசுவலிங்கம் சசிக்குமார்)
லெப்.இருதயன்(வில்விறட் சுதேசன்)
லெப். தரன்(தர்மு செல்வம்)
லெப். செல்லத்தேவன்(பழனியாண்டி விமலன்)
2ம் லெப்.வண்ணன் (நல்லையா ரகுசீலன்)
2ம் லெப்.சூசை(சரவணமுத்து சதீஸ்)
2ம் லெப். புரட்சிமதி(கந்தையா அஜந்தன்)
2ம் லெப். நல்கீரன்(லோகநாதன் தவராசா)
வீரவேங்கை இசைவேந்தன்(செல்வராசா நிசாந்தன்)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments