தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன்!

You are currently viewing தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் மத்திய குழுவில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது நீண்டகாலமாக கட்சியுடன் இணைந்து செயல்பட்டு, முக்கியமான காலகட்டத்திலும் கட்சியுடன் இணைந்து பயணித்ததன் அடிப்படையில் மத்திய குழுவில் யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக அவர் களமிறக்கப்படவுள்ளார்.

அத்தோடு பிரதி முதல்வர் பதவிக்கு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் வை.கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி நிலையில் மாநகர சபை எல்லைக்குள் வாழுகின்ற மக்களுக்கு ஒரு நேர்மையான ஒரு பணியினை ஆற்றலாம் என கடைசி வரை எதிர்ப்பார்க்க முடியாது. மாநகர சபை நிர்வாகம் நேர்மையான ஒரு பாதைக்குள் செல்லாமல் தங்களுக்கு நன்மையை தேடாமல் இருக்கின்ற வளங்களை வைத்து எந்த அளவுக்கு அதனை மக்களுக்கு திருப்திபடுத்தி கொடுக்கலாம்.

இருக்கிற வளங்களை எவ்வாறு அதிகரித்து பங்களிப்பு செய்யலாமென்று ஒரு மனப்பாங்குடன் ஒரு தரப்பு ஆட்சிக்கு வராமல் மாநகர சபை செயற்பாட்டினை மாற்றியமைக்க முடியாது” என தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments