தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இந்தியா சந்திப்பு!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இந்தியா சந்திப்பு!


இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.

 இந்தச் சந்திப்பின்போது பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 எவ்வாறாயினும்,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவகாரங்கள், மாகாண சபை முறைமை மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


 அண்மைய நாட்களில் சிறுபான்மை கட்சிகளுடன் இந்திய உயர்ஸ்தானிகர் நடத்தி வரும் தொடர்ச்சியான சந்திப்பின் நீட்சியாகவே இந்தச் சந்திப்பும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு எதிர்வரும் காலத்தில் தொடர்ச்சியான இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் அறிய முடிகின்றது. 

பகிர்ந்துகொள்ள