தமிழ்த் தீ

தமிழ்த் தீ

கந்தகம் கடித்து குதறிய
சொந்தங்கள்
ஒன்றொன்றாய் செத்து
வீழும்போதெல்லாம்
மனிதநேய மாந்தரின்
இதயம் இரும்பை
ஒத்தே இருந்தது.

முத்துக்குமாரின்
இருதயம் மட்டும்
வெடித்து சிதறும்
மலையின் தீப்பிழம்பாய்
குமுறியெழுந்தது

அதனால்தான்
மரணத்தை வென்று
தீயோடு சங்கமித்தான்
இனவழிப்பாளிகளின்
சூத்திரதாரிகளின்
கோரமுகத்தினை
கொழுத்திப்போட்டான்
சாத்திரிபவனில்
தன்னையே பற்ற வைத்து
சரித்திரம் படைத்தான்
பாரதமே மிரண்டுபோக
தமிழினத்திற்காக
நெருப்பாக
நிமிர்ந்தான்

ஊமையாய் உறங்கிய
உறவுகளின் உள்ளத்தில்
உணர்வை ஊற்றி
உறக்கம் கலைத்தான்

இவன்
சாதாரண மனிதப்பிறவியல்ல
சாதனை நிகழ்த்திய தீரன்
வேதனையை வேரறுக்கும்
கார்மேகம்
யாருமே அறிந்திடாத
அதிசயக் கடவுள்

சொந்தவீட்டில்
இழவு வீழ்ந்து இருக்க
ஒரக்கண்ணால்
ஒய்யாரமாய்
பார்த்துவிட்டு
வாய்க்கு வந்தபடி
வாந்தி எடுப்பவர் மத்தியில்
கடல் கடந்து வாழ்ந்தாலும்
தமிழில்
தமிழினத்தில்
உடல் பிணைந்து
வாழ்ந்தான்
அதனால்தான்
உடலையும்
உயிரையும்
எமக்காய்
தந்தான்.

-தூயவன் –

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments