தமிழ்த் தேசத்தை அங்கீகரிப்பதே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும்!!

தமிழ்த் தேசத்தை அங்கீகரிப்பதே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும்!!

தமிழ்த் தேசத்தை அங்கீகரிப்பதே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக இருக்க முடியும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதற்காக சிங்கள நாடாளுமன்றில் தொடர்ந்து குரல் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

சிறிலங்கா அரசமைப்பில் ஆறாவது (6) திருத்தம் இருக்கும்வரை தமிழீழத்தைப்பற்றி பேச முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், ஒற்றையாட்சியை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாமல் எவரும் நாடாளுமன்றுக்கு செல்ல முடியாது எனத் தெரிவித்த அவர், அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்த பின்னர், நாடாளுமன்றில் எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதே முக்கியமானது எனவும் கூறினார். 

தனியார் தொலைக்காட்சியில் ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் தமிழீழத்தை பற்றி பேசவில்லை. 6வது திருத்தம் இருக்கும் வரை நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழீழ தனிநாட்டை கோர முடியாது. தனிநாடு கோர முடியாவிட்டாலும், ஒரு தனிநாடு ஏன் அவசியமாக இருக்கிறது என்பதை பார்க்கவேண்டும்.

கடந்த 72 வருடமாக தமிழர்கள் ஒரு தேசமாக இருப்பதை அங்கீகரிக்காமல் இருப்பதே பிரச்சனைக்கு காரணம். தமிழ் தேசத்தை அங்கீகரிப்பதே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம்.

இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசு அமைந்து விட்டது. அந்த தரப்பு வேறு எவரையும் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையில்லை. ஆனால் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தை மிக தீவிரமாக முன்கொண்டு செல்லப் போகிறோம். இன்று அதிகாரத்திலுள்ளவர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவற்றை முன்கொண்டு செல்லும்போது, தனிப்பட்டரீதியில் அவர்களிற்கு நெருக்கடி ஏற்படும்.

நாம் ஒரு மாற்றத்தை முன்வைத்து மக்கள் ஆணை பெற்றவர்கள். அந்த கொள்கையை நாடாளுமன்றத்திற்குள் முன்னெடுப்போம். அந்த கொள்கையை ஏற்று எம்முடன் இணைந்து  செயற்படுபவர்கள் இணையலாம். – என்றார். 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments