தமிழ்த் தேசியத்தின்பால் அணிதிரளச் செய்வதே இனத்தின் எதிர்கால இருப்பிற்கான பாதுகாப்பு!!

தமிழ்த் தேசியத்தின்பால் அணிதிரளச் செய்வதே இனத்தின் எதிர்கால இருப்பிற்கான பாதுகாப்பு!!

யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மீள அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான நிதியைத் தனியொரு நபரிடமிருந்தோ அமைப்பிடமிருந்தோ பெறத்தேவையில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவள ஆலோசகர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

ஈழத்திலே வடக்குக் கிழக்கெங்கும் தமிழ் மக்களின் வீடு வீடாகச் சென்று 1 ரூபா முதல் 100 ரூபா வரை திரட்டினால் தமிழ்த் தேசியக் கொள்கையைப் பரப்புவதோடு சிங்களக் கட்சிகளின் முகத்திரையையும் கிழித்துத் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கொள்கையின்பால் அணிதிரளச் செய்யலாம்.

இது எனது கருத்தே தவிர எவரின் மீதான திணிப்புமல்ல. மக்களை தமிழ்த் தேசியத்தின்பால் அணிதிரளச் செய்வதே இனத்தின் எதிர்கால இருப்பிற்கான பாதுகாப்பு

பகிர்ந்துகொள்ள