தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில்!!

You are currently viewing தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில்!!

தமிழ்நாட்டில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவிவருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 12 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது அறியப்பட்டிருக்கும் நிலையில், மேலும் மூன்று பேருக்கு அந்நோய் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய போரூரைச் சேர்ந்த 72 நபர் ஒருவருக்கும் அமெரிக்காவிலிருந்து திரும்பிய புரசைவாக்கத்தைச் சேர்ந்த 52 வயது பெண்மணி ஒருவருக்கும் சுவிட்ஸர்லாந்தில் இருந்து திரும்பிய கீழ்க்கட்டளையைச் சேர்ந்த 25 வயதுப் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள