தமிழ்ப் புத்திஜீவிகள் என்பவர்கள் தர வேண்டியது விஞ்ஞான விளக்கம் அல்ல இன அழிப்பு விளக்கம்.
மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு எதிராகத் தற்போது தமிழ்ச் சூழலிலிருந்து புத்திஜீவிகள் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களிடம் மிக எளிமையான கேள்வி. இதே அனுர அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் இந்தத் திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தது ஏன்? மக்களுக்கு இது தொடர்பாகத் தேர்தல் கால வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டுத் தற்போது மீறுவது ஏன்?
முதலில் இதை விளக்குங்கள். அதை விடுத்து காற்றாலைத் திட்டம் குறித்து விஞ்ஞான விளக்கங்களை அடுக்குவது அபத்தம்.
நேரடி இன அழிப்பு முடிந்து கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் சிக்கியுள்ள ஒரு இனம் நாம்.
இங்கு காது குத்திலிருந்து கருமாதி வரை இன அழிப்புக் கூறுகள் உள்ளடங்கியுள்ளன. இவை ஏற்கனவே அடையாளமும் காணப்பட்டுள்ளன. எனவே எதையும் சந்தேகப்படுவதும், கேள்வி கேட்பதும் தான் விழிப்புணர்வின் முதற்படி.
காற்றாலைத் திட்டம் நல்லது கெட்டது என்பதற்கும் அப்பால் மன்னார் மண்ணின் புவியியல் அமைப்பும், அதன் பொருண்மிய முக்கியத்துவமும், தேசக் கோட்பாட்டில் அதன் வகிபாகமும் , அன்னிய சக்திகளான இந்திய அரசின் அதானி குழுமத்திடம் தாரை வார்க்கப்பட்டு பிற்பாடு ராஜபக்ச சகோதரர்களின் பினாமி நிறுவனத்திடம் தற்போது வந்து சேர்ந்துள்ள் இத் திட்டம் தூர நோக்கில் இன அழிப்புப் பின் புலங்களைக் கொண்டது என்பதுதான் மக்கள் எதிர்ப்பின் மைய அச்சு. ஆனால் சூழலியல் ஆபத்துக்களை முதன்மைப்படுத்திப் போராடுகிறார்கள்.
எனவே தமிழ்ப் புத்திஜீவிகள் என்பவர்கள் தர வேண்டியது விஞ்ஞான விளக்கம் அல்ல இன அழிப்பு விளக்கம்.
தருவீர்களா? காத்திருக்கிறோம்..
-பரணி-






