தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் கலந்து கொண்டதால் தமிழ் ஊடகவியலாளர்கள் பணிநீக்கம்!!

தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் கலந்து கொண்டதால் தமிழ் ஊடகவியலாளர்கள் பணிநீக்கம்!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி,ஜனாசா எரிப்பு, மாவீரர் தினத்தன்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட 40 இளைஞர்களின் விடுதலை, தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் விவகாரம் போன்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும்….

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி கடந்த 3-ம் திகதி அம்பாறையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா,மன்னார்,கிளிநொச்சி என தொடர்ந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிகண்டிப்பகுதில் கடந்த 7-ம் திகதி வெற்றிகரமாக முடிவடைந்தது.

இந்த போராட்டத்தில் பல தமிழ் உணர்வாளர்கள், கலந்துகொண்ட நிலையில் சில தனியார் நிறுவன ஊழியர்களும் விடுமுறை எடுத்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் தென்னிலங்கையில் இயங்கிவரும் தமிழ் தொலைக்காட்சியான சக்தி  (நியூஸ் பெஸ்ட்) ஊடகவியலாளர்கள் மூவர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்ட நிலையில் அவர்களை தனது நிறுவனத்திலிருந்து விலக்கியுள்ளது சக்தி ஊடக நிறுவனம்.

மட்டக்களப்பை சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் இருவரும், கிளிநொச்சியை சேர்ந்த ஒரு ஊடகவியலாளருமே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சக்தி TVல் இருந்து விலகிய மின்னல் ரங்கா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டமைக்காகவே இவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக மறுமுனையில் பேசப்பட்டும் வருகிறது

பகிர்ந்துகொள்ள